கே.வி.,
பள்ளி மாணவர் சேர்க்கை
ஆன்லைன் பதிவு துவக்கம்
கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம்
வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்‘ பதிவு இன்று
துவங்குகிறது. மார்ச்
21க்குள் பதிவு செய்ய
வேண்டும்.
மத்திய
கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி
பெற்ற அமைப்பாக உள்ள,
கேந்திரிய வித்யாலயா சங்கதன்
சார்பில், கே.வி.,
பள்ளிகள் நடத்தப்படுகின்றன.முன்னுரிமைஇவற்றில், ராணுவத்தினர், மத்திய,
மாநில அரசின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினரின் குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வரும்,
2022 – 2023ம் கல்வி ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர்
சேர்க்கைக்கு, ஆன்லைன்
விண்ணப்ப பதிவு, https://kvsonlineadmission.kvs.gov.in/index.html
என்ற இணையதளத்தில் இன்று(28.02.2022) காலை,
10.00 மணிக்கு துவங்குகிறது.
குறைந்த
பட்சம் ஆறு வயதாகியிருக்க வேண்டும்; அதிகபட்சம் எட்டு
வயது வரை உள்ள
குழந்தைகளுக்கு, ஒன்றாம்
வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய
கல்வி கொள்கையின்படி, வரும்
கல்வியாண்டு முதல் இந்த
வயது வரம்பு உயர்வு
அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. இரண்டாம் வகுப்புக்கும், இந்த ஆண்டு ஆறு
வயது நிறைந்த மாணவர்கள்
சேர்க்கப்படுவர்.