TAMIL MIXER EDUCATION.ன்
Reserve Bank செய்திகள்
கிசான் கிரெடிட்
கார்டு டிஜிட்டல் கடன்
திட்டம்
ரிசர்வ்
வங்கி ஆராய்ச்சி மையத்தால்
உருவாக்கப்பட்டுள்ள கிசான்
கிரெடிட் கார்டு டிஜிட்டல்
கடன் திட்டம் தமிழ்நாடு
மற்றும் மத்திய பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் இந்த
மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
அனைத்து
கிராமப்புறங்களிலும் வருமானப்
படிநிலைகளில் உள்ள
விவசாயிகள் மற்றும் ஊரக
வாடிக்கையாளர்களுக்கு நிதி
சேவைகள் வழங்குவது ஊரக
நிதி சேவை திட்டத்தின் முக்கிய நோக்கம்.
தற்போது
கிராமப்புறங்களில் கடன்
வாங்குவதற்கு வங்கி
கிழக்கு சென்று நில
உரிமைச் சான்றிதழ் மற்றும்
இதர ஆவணங்களை காட்ட
வேண்டிய அவசியம் உள்ளது.
இதனால்
வாடிக்கையாளர் கடன்
பெற வேண்டும் என்றால்
வங்கி கிளைக்கு பலமுறை
நடக்க வேண்டிய கட்டாயம்
உள்ளது. இதனால் கிராமப்புற நிதி சேவைகள் சந்திக்கும் சவால்களை கருத்தில் கொண்டு
ரிசர்வ் வங்கி பின்டெக்
செயல்பாடுகளின் ஒரு
பகுதியாக பல விஷயங்களை
டிஜிட்டல் மயமாக்குவதற்கு தற்போது
திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆராய்ச்சி
மையமும் ரிசர்வ் வங்கியும்
இணைந்து கிசான் கிரெடிட்
கார்டு டிஜிட்டல் கடன்
திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த
திட்டம் முதல் கட்டமாக
தமிழ்நாடு மற்றும் மத்திய
பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த
திட்டத்தால் கிராமப்புறங்களில் சேவை
வழங்கப்படாத அல்லது குறைவான
சேவை பெற்ற மக்களுக்கு கடன் உதவி கிடைக்கும்.மேலும் இந்த திட்டம்
முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு
கிராமப்புறங்களில் கடன்
வாங்குவது மொத்தமாக மாற்றமடையும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow