Kingmaker IAS அகாடமியில் இலவச பயிற்சி முகாம்: UPSC / TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி?
UPSC Event யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழக மாணவர்கள் பலரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது போன்று போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Maker IAS அகாடமியும் இணைந்து ஒரு இலவச பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘UPSC/TNPSC குரூப் -1,2 – தேர்வுகளில் வெல்வது எப்படி ?’ என்ற தலைப்பிலான இந்த இலவச பயிற்சி முகாம் வருகிற மே 11-ம் தேதி சென்னை மயிலாப்பூரிலுள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்வில் சிறப்புரை வழங்குவதற்காக ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகரான ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவிருக்கிறார். மேலும், இந்திய வருமானவரித்துறை கமிஷ்னர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றவிருக்கிறார். இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான ஊக்க உரையை வழங்குவதற்கு King Maker IAS அகாடமியின் இயக்குநர் சத்ய ஶ்ரீ பூமிநாதன் கலந்து கொள்ளவுள்ளார். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து அவர்களுக்கு நல்வழி காட்டும் வகையிலான இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்வை ஏற்கெனவே ஆனந்த விகடன் நடத்தியிருக்கிறது. அதிலும் பல மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
UPSC /TNSPC Event
இப்படியான இலவசப் பயிற்சி முகாமில் 1 வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடைபெறவிருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த இலவச பயிற்சி முகாமிற்கு அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம். 9444227273 – என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்து முன்பதிவு செய்யலாம் அல்லது 04466802997 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யுங்கள். இல்லையெனில் கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow