இருளர் குழந்தைகளுக்கு கீ – போர்டு, தபேலா
இலவச பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த
மானாம்பதியில், கீ
– போர்டு, தபேலா இசைக்
கருவிகளை வாசிக்கும் குழந்தைகளின் பேரிசை, மாலை நேரங்களில் அப்பகுதியில் ஒலிக்கும்.
படிப்பறிவு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய இருளர் பெற்றோரின் குழந்தைகளுக்கு, தன்னம்பிக்கை ஊட்டும்
விதமாக, இசை இலவசமாக
பயிற்றுவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு ஊக்கமளித்து வருவது, இதே
பகுதி தனியார் நிறுவன
ஊழியர் சேவியர்ராஜ், தனியார்
இசைப்பள்ளி ஆசிரியர் ஜேம்ஸ்
குழந்தைகளுக்கு கீ
– போர்டு, தபேலா, வாய்
பாட்டு கற்று தர
இது தான் காரணம்
என சேவியர்ராஜ் கூறியது:
மானாம்பதியில் 60க்கும் மேற்பட்ட இருளர்கள்;
பெருநகர் ஊராட்சியில் 250 நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இவர்களின் குழந்தைகள், பள்ளி
செல்வதில்லை. கொரோனா காரணமாக
பள்ளி மூடப்பட்டதால், குளம்
குட்டையில் மீன் பிடிப்பது,
பெற்றோருக்கு உதவியாக
விறகு சேகரிப்பது, பேன்ஸி
பொருட்களை விற்பது போன்ற
பணிகளை செய்து வந்தனர்.
பயனுள்ள
வகையில் அவர்களுக்கு ஏதாவது
கற்றுத் தர முடிவெடுத்து, வாரத்தில் இரு நாட்கள்
மாலை 4 மணி முதல்
6 மணி வரை, இசை
பயிற்சிகளை அளிக்கிறோம். இதற்கு
உதவியாக நண்பர் ஜேம்ஸ்
இருக்கிறார். அவர் தான்
இசை வகுப்பு எடுக்கிறார். தவிர ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்‘
வகுப்பு எடுக்கிறோம்.நான்கு
மாதங்களாக வகுப்பு நடக்கிறது.
குழந்தைகளும் ஆர்வமாக
பயிற்சிகளை கற்கின்றனர்.தற்போது
ஓரொரு கீ – போர்டு,
தபேலா இசைக் கருவிகள்
மட்டும் இருப்பதால், குழந்தைகள் கற்பதில் சிக்கல் இருக்கிறது. விரைவில் கூடுதல் இசைக்
கருவிகளை வாங்குவோம். யாரேனும்
உதவி செய்தால் நன்றாக
இருக்கும்.