கேந்திரிய வித்யாலயா
பள்ளி மாணவர் சேர்க்கை
– April 1 முதல் விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசின் கல்வி நிறுவனமான
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர்
சேர்க்கை துவங்கவுள்ளது. அதன்
படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் 2021-2022ஆம்
ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை
நடைபெறவுள்ளது. இந்த
மாணவர் சேர்க்கை ஆன்லைன்
வழியாக நடத்தப்படவுள்ளது.
அதன்
படி ஆன்லைனில் விண்ணப்பிக்க April 1 முதல் 19 வரை
கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன்
வழி மாணவர் சேர்க்கையில் விண்ணப்பிக்க https://www.kvsonlineadmission.kvs.gov.in
என்ற இணையதள முகவரியை
பயன்படுத்த வேண்டும் எனவும்,
கைபேசி வழியாக விண்ணப்பிக்க https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/
என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளியில்
உள்ள மற்ற காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 8 முதல் 15ஆம்
தேதி வரை நேரில்
சென்று விண்ணப்பிக்கலாம் என
கூறப்பட்டுள்ளது. மேலும்
இந்த ஆண்டிற்கான (2021-2022) 11ஆம்
வகுப்பு மாணவர் சேர்க்கை
படிவங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.