கற்போம் எழுதுவோம்
தேர்வுகள் – மே 16ஆம்
தேதிக்கு ஒத்திவைப்பு
மத்திய
அரசின் ‘கற்போம் எழுதுவோம்’
திட்டம் மூலமாக 15 வயதிற்கு
மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி
கற்பிக்கப்படுகிறது. இதற்கான
வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த
வகுப்புகள் மூலமாக கல்வி
அறிவு இல்லாதவர்கள் கையெழுத்திடவும், வங்கி கணக்குகளை கையாளவும்,
பஸ் எண்களை அடையாளம்
காணவும் பயனுள்ளதாக இருக்கும்.
கற்போம்
எழுதுவோம் திட்ட 2021ஆம்
ஆண்டுக்கான தேர்வுகள் மார்ச்
27ஆம் தேதி நடக்க
இருப்பதாக முன்னதாக அறிவிப்புகள் வெளிவந்தது. தேர்வுக்காக தலைமை
ஆசிரியர்கள் தேர்வு மையங்களை
தயார் செய்யும் பணிகளில்
ஈடுபட்டிருந்தனர். தற்போது
தமிழகம் முழுவதும் கொரோனா
தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பள்ளி
மற்றும் கல்லூரிகள் அனைத்தும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது
கற்போம் எழுதுவோம் தேர்வுகளை
நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது.
நடப்பு
ஆண்டில் 3,10,000 பேருக்கு
கற்போம் எழுதுவோம் தேர்வுகள்
மாவட்ட வாரியாக நடத்தப்பட
உள்ளது. கொரோனா பரவலை
கருத்தில் கொண்டு பள்ளி
சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர
முருகன் அவர்கள் ‘கற்போம்
எழுதுவோம்’ தேர்வுகளை மே
16ஆம் தேதி ஒத்திவைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அறிக்கையில் தேர்தல் பணிகள்
காரணமாகவும், கொரோனா பரவல்
காரணமாகவும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை கண்ணன்
அவர்கள், “நடப்பு ஆண்டில்
580 தேர்வு மையங்களில் மொத்தம்
11,600 நபர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்பட்டது. இவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் தேர்வு
வரை நடக்கும். தங்கள்
கற்றலை வழக்கம் போல்
அவர்கள் தொடர வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.