சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி
கிராமங்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்று மகாத்மா காந்தி தெரிவித்திருந்தார்.
கிராமப்புறங்களில் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு திட்டங்களை அரசும் தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன.
கிராமப்புற நபர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தோடு பல்வேறு வகையான பயிற்சிகள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது . முற்றிலும் இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது கனரா வங்கி தேனியில் உள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற நபர்களுக்கான இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பல்வேறு வகையான பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 13 நாட்கள் சணல் பை தயாரிப்பு பயிற்சி அழிக்கப்பட இருக்கிறது. இந்த இலவச பயிற்சியானது தினசரி காலை 9.30மணியிலிருந்து மாலை 5.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் பயிற்சி துவங்க உள்ளது.
இந்த சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பதிவு செய்வது மட்டும் முக்கியம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8072334369& 9500314193& 9442758363 & 8870376796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கனரா வங்கி தேனி கிளை தெரிவித்துள்ளது. கனரா வங்கி, RSETI உழவர் சந்தை எதிர் புறம்,கான்வென்ட் அருகில் தேனி இந்த முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow