சர்வதேச நட்பு தினம் – ஜூலை 30
மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30
சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெறும் மிகப்பெரிய குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர்.
பிரான்சில் கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை விளையாட்டு நிகழ்வுகள் கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணி 13வது முறையாக கோப்பையை கைப்பற்றியது
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை ‘கல்வி அமைச்சகம்’ என்று பெயர் மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.