ஜோஹோவில் டிகிரி முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி ‘பிரேக்’ எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஜோஹோவில் “மறுபடி” எனும் திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பெண்களுக்கு மட்டுமே என்ற வகையில் புதிய அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சாப்ட்வேர் துறையில் பணியாற்றி குடும்ப சூழல் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தினால் பல பெண்கள் வேலையை பாதியில் நிறுத்தி இருக்கலாம். இப்படி வேலையை பாதியில் கைவிட்ட பெண்களுக்கானது தான் இந்த அறிவிப்பு.
இதனை ஜோஹோ நிறுவனம் “மறுபடி” (MARUPADI) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது. அதாவது பாதியில் பணியை துறந்த பெண்களை தேர்வு செய்து ஜோஹோ ஸ்கூல்ஸ் ஆஃப் லேனிங் சார்பில் பயிற்சி வழங்கி பணியமர்த்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனால் ஐடி துறையில் பணியாற்றி ஓய்வில் இருக்கும் பெண்கள் மீண்டும் பணி செய்ய விரும்பினால் இதில் பங்கேற்கலாம்.
பொதுவாக ‘மறுபடி’ திட்டத்தின் மூலம் ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் ரைட்டிங், சாப்ட்வேர் டெஸ்ட்டிங், சாப்ட்வேர் டெவலப்மென்ட் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பயிற்சி வழங்கி பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் இந்த முறை டெக்னிக்கல் ரைட்டிங் பிரிவுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டெக்னிக்கல் ரைட்டிங் (Technical Writing). இதில் டெக்னிக்கல் ரைட்டிங்கின் ஃபண்டமென்டல்ஸ், டெக்னிக்கல் ரைட்டிங் அடிப்படையில் டீம் டைவ்ஸ் (Deep Dives), SEO Basics, Marketing Techniques உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் பெண்களுக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பெண்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் 2 ஆண்டு Technological பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டு தற்போது வேலையின்றி இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கான வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் எந்த வயது கொண்ட பெண்கள் வேண்டுமானாலும்
www.zohoschools.com
எனும் இணையதளம் சென்று ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். நவம்பர் 29ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு என்பது இருக்கும்.
மேலும் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவரும் “மறுபடி” எனும் பயிற்சிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றால் இல்லை. விண்ணப்பம் செய்வோருக்கு நுழைவு தேர்வு (Entrance Exam) இருக்கும். அதில் பாஸ் ஆக வேண்டும். அதன்பிறகு ஒரு இண்டர்வியூ இருக்கும். அதிலும் தேர்வானால் மட்டுமே “மறுபடி” பயிற்சியில் சேர முடியும். இதற்கான நுழைவு தேர்வு, இன்டர்வியூ எப்படி இருக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தவரை அதற்கேற்ப தயாராகி செல்வது நல்லது.
மேலும் பயிற்சியில் சேருவதற்கான நுழைவு தேர்வு, இண்டர்வியூவில் பங்கேற்கும்போது லேப்டாப்/ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். இணையதள சேவையில் குறைபாடு இருக்க கூடாது. இண்டர்வியூவில் செலக்ட் ஆனால் டிரெய்னிங் வழங்கப்படும். இந்த டிரெய்னிங்கிற்கு ஒவ்வொருவரும் தங்களின் சொந்த லேப்டாப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதன்பிறகு இந்த Course என்பது 3 மாதம் நடக்கும்.
இந்த கோர்ஸ் பயிற்சி என்பது 2025 ஜனவரி மாதம் 7 ம்தேதி தொடங்கும். இந்த பயிற்சி ஆன்லைனில் நடக்காது. சென்னை அலுவலகத்தில் தான் நடக்கும். இதனால் தேர்வாகும் நபர்கள் நேரடியாக சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். இந்த பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் Stipend முறையில் வழங்கப்படும்.
இந்த கோர்ஸ் என்பது 3 வகைகளில் வழங்கப்படும். ஒன்று Lectures and Exercises, 2வது Mentoring and Gudiance, 3வது என்பது Internship base Hiring என்ற வகையில் இருக்கும். இந்த 3 வகைகளில் சிறப்பாக செயல்படும் போது ஜோஹோ அலுவலகத்தில் டெக்னிக்கல் இன்டர்வியூ வைத்து பணியமர்த்தப்படுவார்கள். ஒருவேளை பணிக்கு தேர்வாகாத பட்சத்திலும் பிற நிறுவனங்களில் பணியாற்றவும், மீண்டும் சிறிது காலத்துக்கு பிறகு ஜோஹோ வேலைவாய்ப்பை பெறவும் உதவியாக இருக்கும். இதனால் பெண்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்யும்போது முக்கியமான விஷயத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள். அதாவது விண்ணப்ப படிவத்தில் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? 3 மாதம் பயிற்சியை முழுவதுமாக அட்டென் செய்ய முடியுமா? ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாரா? என்ற கேள்விகள் அடுத்தடுத்து இருக்கும். இதற்கு Yes கொடுத்தால் மட்டுமே பெரும்பாலும் ஜோஹோவில் இருந்து அழைப்பு வரும் என சொல்லப்படுவது உண்டு. இதனால் அதில் விண்ணப்பதாரர்கள் கவனம் வைத்து கொள்வது நல்லது. இதுதவிர கூடுதல் விபரங்களை அறிய வேண்டும் என்றால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து கொள்ளலாம்
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய
Click Here
Very Useful Work
share with your friends