நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைய
தலைமுறையினர் வேலை
வாய்ப்பு பெறும் நோக்கில்
ஆரம்பிக்கப்படவுள்ள, ‘தங்க
நகை மதிப்பீடும் அதன்
நுட்பங்களும்‘ பயிற்சி,
பர்கூர் கூட்டுறவு தொழிற்
பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது.
பயிற்சி
முடிவில் தமிழக அரசால்
அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு
கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ்
வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவர்கள் தேசிய
வங்கிகள் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு
வங்கிகள் மற்றும் தனியார்
நிதி நிறுவனங்களில் நகை
மதீப்பீட்டாளராகப் பணியாற்றலாம்.
சனி
மற்றும் ஞாயிற்றுகிழமை, 100 மணிநேரப்
பயிற்சியாக நடைபெறும். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, 10ஆம்
வகுப்பு தேர்ச்சியும், 18 வயதுக்கு
மேற்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும்.
பயிற்சில்
சேர விரும்புவோர் முதல்வர்,
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பர்கூர் என்ற
முகவரியில் மார்பளவு புகைப்படத்துடன் நேரில் வந்து, 100 ரூபாய்
செலுத்தி விண்ணப்பம் பெற்று,
பயிற்சி கட்டணமாக, 4,544/- ரூபாய்
செலுத்த வேண்டும். இதற்கான
விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்
விபரங்களுக்கு 04343 265652 என்ற
எண்ணிலோ மற்றும் 99448 20545, 95009 61603
என்ற மொபைல் எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம்.