TAMIL MIXER
EDUCATION.ன்
தொழில்நுட்ப
பயிற்சி செய்திகள்
நகை மதிப்பீட்டு தொழில்நுட்ப பயிற்சி – புதுச்சேரி
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீடு தொழில்நுட்ப பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்
பட்டுள்ளது.
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும்
குறித்த
பயிற்சி
விரைவில்
ஆரம்பிக்கப்பட
உள்ளது.
இப்பயிற்சியில்
சேர
விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்.
சனி
மற்றும்
ஞாயிற்றுக்
கிழமைகளில்
7 வாரங்கள்
பயிற்சி
நடைபெறும்.
18
வயதுக்கு
மேற்பட்ட,
எட்டாம்
வகுப்பு
படித்த
ஆண்கள்,
பெண்கள்
பயிற்சியில்
சேரலாம்.பயிற்சிக்கட்டணம்
ரூ.5000.
பயிற்சிக்கான
உபகரணங்கள்
மற்றும்
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவர்கள்
தேசிய
வங்கிகள்
உட்பட
பல்வேறு
வங்கிகள்,
நிதி
நிறுவனங்கள்,
நகைக்கடைகளில்
பணிபுரிய
வாய்ப்பு
உண்டு.பயிற்சியில் சேர விரும்புவோர்
புதுச்சேரி
கூட்டுறவு
மேலாண்மை
நிலையம்,
எண்.
62. சுய்ப்ரேன்
வீதி,
புதுச்சேரி
என்ற
முகவரியில்
நேரில்
ரூ
100 செலுத்தி
விண்ணப்பம்
பெற்றுக்
கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை
வரும்
21ம் (21.10.2022) தேதிக்குள்
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு
0413-2220105, 0413-2331408
என்ற
தொலைபேசி
எண்களை
தொடர்பு
கொள்ளவும்.