JEE Main 2024 தேர்வு அறிவிப்பு – முழு விவரங்கள்
தேர்வு நடைபெறும் சுற்றுகள்:
- இத்தேர்வானது Session 1 (January 2024), Session 2 (April 2024) என்று இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
- மேலும் இத்தேர்வானது Paper 1 (BE / B.Tech), Paper 2A / 2B (B.Arch / B.Planning) என இரண்டு சுற்றுகளாகவும் நடைபெறவுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் முறை:
JEE Main 2024 தேர்வானது கணினி வழி தேர்வு முறையில் காலை (9.00 மணி முதல் 12.00 மணி வரை), மாலை (3.00 மணி முதல் 6.00 மணி வரை) என 02 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தேர்வானது ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம், மராட்டி போன்ற 13 மொழிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப கட்டணம்:
- Unreserved / EWS / OBC – ஆண்கள் (ரூ.1,000/- முதல் ரூ.5,000/- வரை), பெண்கள் (ரூ.800/- முதல் ரூ.4,000/- வரை)
- SC / ST / PWBD / Transgender – ரூ.500/- முதல் ரூ.2,500/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
இந்த நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 01.11.2023 அன்று முதல் 30.11.2023 அன்று வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.