JEE நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி
திருப்பூர் : ஜே.இ.இ., நுழைவு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு, மேல்நிலைப்பள்ளிகளில், அரையாண்டு தேர்வு விடுமுறையில் (டிச.
26 முதல்) இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.தமிழக அரசின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடக்கவுள்ள ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பங்கள் நவ., மாதம் வெளியிடப்பட்டது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின், வரும், 26 முதல், 30ம் தேதி வரை மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கணிதம், வேதியியல், இயற்பியல் குறித்த அறிமுக பயிற்சிகளை காலை, 9:00 முதல் மாலை, 4:30 மணி வரை வழங்கப்பட உள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், ஜே.இ.இ., பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் பயிற்சி நடக்கும் நாள்களில் ஓராசிரியர் வீதம் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர் விடுமுறை நாட்ககளில் பணி செய்ததை ஈடு செய்வதற்கான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்,’ என்றனர்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow