தென்காசி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துரை.
ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுத் தோவுகள் இயக்ககத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில்ல் நடத்தப்பட்ட மொழித்தோவில் தனித்தோவா்களாகப் பங்கேற்று தோச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதைப் பின்பற்றி, தகுதியுடையோா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி என்ற முகவரிக்கு நேரில் சென்றோ, அஞ்சல் வாயிலாகவோ இம்மாதம் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.