Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் 3 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தான் இந்தியாவில் உள்ளனர்.
ஆனால் இந்தியாவிற்கு தற்போது 10 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவை. இதனால் தமிழக அரசு பட்டயக் கணக்காளர்களை உருவாக்கும் முயற்சியில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பட்டய பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
Check Related Post: