TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
பாசிப் பயறு
விதைப் பண்ணை அமைக்க
அழைப்பு
சேலம்
மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் காரிப் பருவத்தில் 1000 முதல்
1,100 ஹெக்டோ பரப்பளவில் பாசிப்
பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு
பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான
சான்று பெற்ற விதைகள்
உற்பத்தி செய்து வழங்கிட
244 ஹெக்டோ பரப்பில் பாசிப்
பயறு விதைப் பண்ணை
அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதைப் பண்ணை
அமைக்க விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஆதார நிலை விதைகள்,
வேளாண்மை விரிவாக்க மையம்
மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விதைப்
பண்ணை விவசாயிகளிடமிருந்து உற்பத்தி
செய்யப்படும் ஆதார
நிலை விதைக்கு கிலோ
ஒன்றுக்கு கொள்முதல் விலையாக
ரூ. 88, சான்று நிலை
விதைக்கு ரூ. 85-ம்
வழங்கப்படுகிறது.
விதைப்
பண்ணை அமைத்திடுவதன் மூலம்
விவசாயிகள் சந்தை விலையினைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.
25 முதல் ரூ. 30 வரை
கூடுதலாக லாபம் பெறலாம்.
விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு
பாசிப்பயறு விதைப் பண்ணை
அமைத்து கூடுதல் லாபம்
பெற்றிட மகுடஞ்சாவடி வேளாண்மை
உதவி இயக்குநா் அழைப்பு
விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here