TAMIL MIXER EDUCATION-ன் வேலைவாய்ப்பு செய்திகள்
இலவச திறன்
பயிற்சி பங்கேற்க அழைப்பு
வால்பாறை: திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில், பெண்களுக்கான இலவச திறன் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக்கழகம், காருண்யா
சமூக சேவை மையம்
இணைந்து, இலவச திறன்
பயிற்சி வழங்குகிறது.
இதுகுறித்து, காருண்யா சேவை மையத்தின் இயக்குனர் டெய்சிமரியா கூறியதாவது:
தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில்,
காளான் வளர்ப்பு பயிற்சி,
எலக்ட்ரீசியன், பிளம்பிங்
பயிற்சி, அழகு கலை
பயிற்சி, தையற்பயிற்சி உள்ளிட்ட
ஆறு வகையான பயிற்சிகள் காருண்யா சேவை மையத்தில்
இலவசமாக கற்றுத்தரப்படுகிறது.
பயிற்சி
பெற விரும்புபவர்கள், 19 வயதுக்கு
மேல், 40 வயதுக்குட்பட்டவராக இருக்க
வேண்டும்.
தகுதியுடையவர்கள் தங்களது பெயர்களை
சமூக சேவை மையத்தில்
பதிவு செய்து கொள்ளலாம்.