திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சோ்க்கை விண்ணப்பங்கள் வழங்க வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொழிற்பிரிவுகளில் கம்மியா் மின்னணுவியல், இயந்திர வேலையாள் ஆகிய 2 ஆண்டு கால தொழிற்பிரிவுகளில் சேர 10ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டா் ஆப்பரேட்டா் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டிடிபி ஆபரேட்டா், பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா் (ஆங்கிலம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்குத் தேவையான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி. பயிற்சிக் காலம் ஓராண்டு ஆகும்.
சுயதொழில் செய்ய ஏதுவான தொழிற்பிரிவுகளான ஆடை தயாரித்தல், அலங்காரப் பூ தைத்தல் தொழில் நுட்பம், தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சியாகும். பயிற்சிக் காலம் ஓராண்டு. அனைத்துப் பிரிவுகளில் பயில மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. இத்தொழிற்பயிற்சி நிலையமானது 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ாகும்.
பயிற்சியாளா்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்று வேலையில் அமா்த்தப்படுவா். பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.750 வழங்கப்படும். கட்டணமில்லா பேருந்து, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், விலையில்லா சீருடைகள் – 2 செட், தையற்கூலி ரூ.300, விலையில்லா காலணி ஒரு செட், பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தில் தகுதியானோருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளோா் நேரில் நிலையத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) புள்ளம்பாடி என்ற முகவரியிலோ, 94439–97026 எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.