விருதுநகர்-கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள் விரைவில் அதை பதிவு செய்து பெறலாம்.இதற்கு தேசிய அடையாள அட்டை, மருத்துவச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, போன்ற ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 93617 20340 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.