TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
உறைவிடப்பள்ளி, விடுதியில் மாணவியர் சேர அழைப்பு – சேலம்
இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:
மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள, 12 ஒன்றியங்களில், 6 – 8ம் வகுப்பு
வரை, பள்ளி செல்லா,
இடைநின்ற பெண் குழந்தைகள், கல்வியை தொடர, 13 கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா
உறைவிடப்பள்ளி; 9 முதல்,
பிளஸ் 2 வரை படிக்கும்
மாணவியர், இடைநிலை கல்வியை
உறுதிப்படுத்த, 12 விடுதிகள்
உள்ளன.
இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மிகவும்
பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகள், வறுமை கோட்டுக்கு கீழுள்ள
குழந்தைகள், ‘எய்ட்ஸ்‘ நோயால்
பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், துாய்மை பணியாளரின் குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை
இழந்த குழந்தைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது
மாணவியர் சேர்க்கை பூர்த்தியடையாத, உறைவிடப்பள்ளிகளான சங்ககிரி,
ஏற்காட்டில் தலா, 30 பேர்,
காடையாம்பட்டி, நீதிபுரத்தில் தலா, 15 பேர் என,
90 மாணவியருக்கு சேர்க்கை
நடக்கிறது. அதேபோல் மாணவியர்
விடுதியில், நங்கவள்ளி, 30, ஏற்காடு,
மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், தாரமங்கலம் தலா, 20, இடைப்பாடி, காடையாம்பட்டி தலா, 10 என, 130 இடங்களை
பூர்த்தி செய்ய சேர்க்கை
நடக்கிறது.
தையல்
பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, கணினி, கராத்தே
பயிற்சியுடன், ஒவ்வொரு
மாணவியர் வங்கி கணக்கில்
மாதம், 200 ரூபாய் ஊக்கத்தொகை, ‘டெட்‘ தகுதி பெற்ற
ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கும் வசதி, நுாலக வசதி
உள்ளிட்டவை, 9 – 12ம் வகுப்பு
வரையான மாணவியருக்கு கிடைக்கும்.
தகவலுக்கு,
கலெக்டர் அலுவலக அறை
எண்: 303ல் உள்ள,
ஒருங்கிணைந்த பள்ளி
கல்வி, மாவட்ட திட்ட
அலுவலகத்தை, 97888 58930, 0427 2450352 என்ற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here