HomeBlogகாசோலைகளில் சிடிஎஸ் வசதி அறிமுகம் - நவீனமயமாகும் வங்கிகள்
- Advertisment -

காசோலைகளில் சிடிஎஸ் வசதி அறிமுகம் – நவீனமயமாகும் வங்கிகள்

 

Introduction of CDS facility in checks - Banks modernizing

காசோலைகளில் சிடிஎஸ்
வசதி அறிமுகம்நவீனமயமாகும் வங்கிகள்

நாடு
முழுவதும் உள்ள வங்கிகளை
வலிமைப்படுத்தும் நோக்கில்
ரிசர்வ் வங்கி சார்பில்
அனைத்து சிறு வங்கிகளையும், பெரிய வங்கிகளுடன் இணைக்க
உள்ளதாக தெரிவித்தது.

CORONA காலத்தில் சிறு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள்
திருப்ப செலுத்தாமல் வாராக்கடனாக நிலுவையில் உள்ளது. இதன்
காரணமாக சிறு வங்கிகள்
திவாலாகும் நிலை உள்ளது.

இதனை
சரி செய்யும் நோக்கில்
தான் ரிசர்வ் வங்கி
இந்த திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும்
உள்ள வங்கிகளை மேம்படுத்த பல நவீன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி
வங்கிகளில் காசோலை சரிபார்ப்பு முறையில் சி.டி.எஸ்
வசதியை அனைத்து வங்கிகளும் அமல்படுத்த வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளது. இதற்கான
கடைசி தேதி செப்டம்பர் 30-ஆம் தேதி ஆகும்.

சி.டி.எஸ்
முறை என்பது, பொதுவாக
காசோலை சரிபார்ப்பு வங்கிகளில் காசோலையை Deposit செய்த
உடன் அதனை சரிபார்ப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே ஒப்புதல் பெறப்பட்டு அதற்கு பின் பணம்
வழங்கப்படும்.

ஆனால்
சி.டி.எஸ்
முறை மூலமாக காசோலையின் படம் மற்றும் எம்..சி.ஆர்
குறியீடு உள்ளிட்ட விபரங்கள்
கணினி மூலமாக அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

இதன்
காரணமாக காசோலைகளை அதே
வங்கிகளில் மட்டுமே வைத்து
பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
காசோலைகளை வேறு இடத்திற்கு எடுத்து செல்ல தேவையில்லை. இதன் காரணமாக காசோலையை
எளிதாக நவீன முறையில்,
நேரம் குறைவாக பணம்
மாற்றம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -