கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் நடத்தப்படும் இலவச துரித உணவு பயிற்சியில் சேர செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெறவுள்ளது.
இது குறித்து கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கு அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச துரித உணவுப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
10 நாள்கள் நடைபெறவுள்ள இந்த முழுநேர பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க எழுத, தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம்புதூா், திருப்பூா் -641652′ என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.
முதலில் வருவோா்க்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890–43923, 99525–18441, 86105–33436 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow