இணைய வழி
பட்டா மாறுதல் திட்டம்
பட்டா
மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு வசதிகளை எளிதாக்க தமிழக
அரசு கடந்த 2018-ம்
ஆண்டு ஸ்டார் 2.0 என்ற
மென்பொருள் திட்டத்தை அறிமுகம்
செய்தது.
முழுக்க
முழுக்க இணையம் வழியாக
பட்டா மாற்றும் நடைமுறைய
மேற்கொள்ள தமிழக அரசு
ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி
அசையா சொத்து குறித்த
உரிமை மாற்றம், செய்யப்படும் ஆவணப்பதிவுகளின் போது
சர்வே எண் உட்பிரிவு
செய்ய தேவை எழாத
சொத்துக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் சார்பதிவாளர் கணினிவழியில் ஒப்புதல் வழங்குவார்.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள
சார்பதிவகங்களில் நடைமுறைக்கு வந்தது.
இந்த
திட்டத்தை கரூர், திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேற்று
முதல் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் அனைத்து
மாவட்ட சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிஉள்ளார்.
அதன்படி,
அசையா சொத்து பொறுத்த
ஆவணம் எழுதிக் கொடுத்த
நபரின் பெயரும், ஏற்கனவே
வழங்கப்பட்ட இணையவழி பட்டாவில்
கண்டுள்ள நில உரிமையாளரின் பெயரும் ஒப்பிடப்படும், 2 பெயரும்
ஒன்றாக இருந்தால் தானாக
பட்டா மாறுதல் குறித்து
ஒப்புதல் குறியீடு சார்பதிவாளரால் வழங்கப்படும்.
இணையவழி
சிட்டாவில் கண்ட பட்டாதாரர் இறந்த வாரிசுதாரர்களால் ஆவணம்
எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையிலும், கூட்டுப்பட்டாதாரர் பெயரும்
ஆவணத்தில் கண்ட விற்பனை
செய்பவரின் பெயரும் ஒன்றாக
இல்லாமல் மாறுபட்ட நிலையில்
இருந்தால், தானாக பட்டா
மாறுதலுக்கு சார்பதிவாளர் ஒப்புதல்
வழங்குவது தவறானது.
இந்த
திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து பெரம்பூர், கரூர்,
திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவாரூர் ஆகிய
10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது. உரிய கவனமின்றி
அரசின் திட்டத்திற்கு சார்பதிவாளர்கள் செயல்படுவது பதிவுத்துறை தலைவரின்
கவனத்திற்கு வந்தால், ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும்.