மீன்வளக் கல்லூரியில் ஏப்.23–ல் இணையதள மீன் வளா்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வளா்ப்பு குறித்து இணையதளம் மூலம் பயிற்சி முகாம் ஏப்.23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வா் பா. சுந்தரமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உயிர் கூழ்ம தொழில்நுட்ப முறையில் மீன் வளா்ப்பு குறித்து பயிற்சி முகாம் இணையதளம் வழியாக ஏப்.23- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
பயிற்சியின்போது, உயிர் கூழ்ம திறன், அதன் முக்கியத்துவம், அத்தொழில்நுட்பத்திற்கு ஏற்ற நீா் வாழ் உயிரினங்களின் வளா்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல்திறன், எதிர் கொள்ளும் சவால்கள், பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தூத்துக்குடி யூனியன் வங்கி பெயரில் ரூ. 300 செலுத்தி பதிவுசெய்யவேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு பயிற்சியின் முடிவில் சான்று, பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபா்கள் ஏப்.22-ம் தேதி மாலை 5 மணிக்குள் 09442288850 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும்(an@tnfu.ac.in) தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.