கடன்களுக்கான வட்டியை
முழுவதும் தள்ளுபடி செய்ய
முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு
நாடு
முழுவதும் CORONA காரணமாக
கடந்த ஆண்டு முதல்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. CORONA கட்டுப்பாடு நடவடிக்கையாக பல
கல்வி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக
மக்கள் பொருளாதார ரீதியாக
பாதிக்கப்பட்டனர். பல
தொழில் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவித்திருந்தது. இதன் காரணமாக
மக்கள் வங்கிகளில் பெற்ற
கடன்களுக்கான தவணை
தொகையை செலுத்த முடியாத
நிலை ஏற்பட்டது. இதனால்
வங்கிகளில் தவணை தொகையில்
சலுகைகள் வழங்கப்பட வேண்டும்
என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை
பரிசீலனை செய்த மத்திய
அரசு கொரோனா காலகட்டத்தில் வங்கிகளில் தவணை தொகை
செலுத்த 6 மாத காலம்
அவகாசம் வழங்கியது. அதில்
ரூ.2 கோடி வரையிலான
கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு
வட்டி வசூலிக்க தடை
விதித்தது. அதன்படி மத்திய
அரசு கொரோனா காலத்தில்
கடன் பெற்றவர்களுக்கான வட்டிக்கு
வட்டி தொகையை அரசே
ஏற்றுக் கொள்ளும் என
அறிவிப்பு வெளியிட்டது. இந்த
சலுகையை எங்களுக்கும் வழங்க
வேண்டும் என ரியல்
எஸ்டேட், மின்சாரம் மற்றும்
சிறுகுறு உற்பத்தியாளர்கள் கேட்டு
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த
வழக்கை விசாரித்த நீதிபதி
அசோக் பூஷண் இது
குறித்து மத்திய அரசு
பதிலளிக்கப்பட வேண்டும்
என உத்தரவிட்டனர். இந்த
வழக்கு குறித்து மத்திய
அரசு கூறுகையில், “CORONA காலத்தில் பொருளாதார ரீதியாக
பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாத
கால தவணை தள்ளுபடி
செய்வதாக சலுகை வழங்கப்பட்டது. இதனை அனைவருக்கும் வழங்கினால் மத்திய அரசுக்கு ரூ.6
லட்சம் கோடி வரை
இழப்பு ஏற்படும். இதனால்
வங்கிகளின் நிதி நிலைமை
பாதிக்கப்படும்” என
பதில் அளித்தது.
இந்நிலையில் வழக்கு குறித்து தீர்ப்பை
டிசம்பர் மாதம் 17-ஆம்
தேதி அன்று தேதி
குறிப்பிடாமல் ஒத்தி
வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு
இன்று விசாரணைக்கு வந்தது.
அதில், “CORONA காலத்தில்
வங்கிகளில் வசூலிக்கப்பட்ட ரூ.2
கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்க
தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு
வசூலிக்கப்பட்ட வட்டியை
திரும்பி தரவேண்டும். மேலும்
இந்த அறிவிப்பை 6 மாத
காலத்திற்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது. ரிசர்வ் வங்கி
மற்றும் மத்திய அரசின்
முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை”,
என உத்தரவிட்டுள்ளது.