MASKED ஆதார் கார்டு
பதிவிறக்கம்
செய்ய வழிமுறைகள்
இந்திய
அரசின் தனி மனித
அடையாளத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது ஆதார் அட்டை.
இந்த ஆதார் அட்டைகளை
பாதுகாப்பாக வைத்திருக்க Masked ஆதார்
கார்டு என்ற செயல்முறை
உள்ளது. இந்த செயல்முறையின் மூலம் நம் ஆதார்
அட்டையின் முதல் 8 இலக்கங்களை மறைக்க முடியும். தேவை
ஏற்படின் ஆதார் அட்டையின்
கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே உபயோகித்து கொள்ளலாம்.
இந்த Masked ஆதார் அட்டையின்
மூலம் அரசின் நலத்திட்டங்கள் ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது
என்பது குறிப்பிடத்தக்கது.
masked
ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய
வழிமுறைகள்
UIDAI யின் https://uidai.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, My Aadhaar என்ற
ஆப்ஷனில் Download Aadhaar என்ற
தெரிவை Click செய்யவும்.
பிறகு 12 இலக்க
ஆதார் எண்ணை பதிவு
செய்யவும்.
அதில் I want a Masked
Aadhaar என்ற தெரிவை Click
செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்டுள்ள Captcha குறியீட்டை பதிவு செய்யவும்.
பிறகு send OTP என்ற
ஆப்ஷனை Click செய்யவும்.
உங்கள் ஆதார்
எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்
எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
OTP எண்ணை சரி
பார்த்த பிறகு உங்கள்
Masked ஆதார் அட்டை Pdf File படிவத்தில் இருக்கும்.
அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Enrollment
ID பயன்படுத்தி masked ஆதார் அட்டையை பெற வழிமுறைகள்
UIDAI யின் https://uidai.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்துக்கு சென்று, My Aadhaar என்ற
ஆப்ஷனில் Download Aadhaar என்ற
தெரிவை Click செய்யவும்.
இதில் Enrollment ID என்ற
ஆப்ஷனை Click செய்யவும்.
உங்கள் 14 இலக்க
Enrollment ID எண்ணை பதிவிடவும்.
இந்த எண்
உங்கள் சேர்க்கை (Enrollment) படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
பிறகு I want a Masked
Aadhaar என்ற தெரிவை Click
செய்யவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள Captcha குறியீட்டை பதிவு செய்யவும்.
பிறகு Send OTP என்ற
ஆப்ஷனை Click செய்யவும்.
உங்கள் ஆதார்
எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்
எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அந்த OTP எண்ணை
வைத்து ஆதார் அட்டையை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Virtual
ID பயன்படுத்தி Masked ஆதார் அட்டையை பெற வழிமுறைகள்
https://uidai.gov.in/
என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்கு சென்று,
my
ஆதார் பக்கத்தில் ஆதார்
Service ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
பிறகு Virtual ID என்பதை
Click செய்யவும்.
அதில் உங்கள்
ஆதார் எண்ணை பதிவு
செய்து கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்யவும்.
உங்கள் மொபைல்
எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
OTP எண்ணை கொடுத்து
Virtual ID மூலம் சேவையை துவங்கவும்.
My Aadhaar என்ற
ஆப்ஷனில் Download Aadhaar என்ற
தெரிவை Click செய்யவும்.
அதில் Virtual ID என்பதை
தெரிவு செய்து I want a masked
Aadhaar என்று கொடுக்கவும்.
பிறகு கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்து
OTP யை பதிவிடவும்.
Pdf படிவத்தில் இருக்கும்
Masked ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.