இந்தியாவை பொருத்தவரையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் தரும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி INSPIRE – Manak என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மத்திய அரசு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகின்றது. 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடையே அறிவியலில் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது.
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்திற்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.inspireawards-dst.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.