
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் மூலம் தேனீ, காளான், மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு, தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
அதன்படி தற்போது, 30 நாட்கள் போட்டோ, வீடியோ, 10 நாட்கள் தேனீ வளர்ப்பு, 10 நாட்கள் காளான் வளர்ப்பு, 10 நாட்கள் மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளன. இதற்கு எட்டாம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள இளைஞர்கள் வரும், 30க்குள் ஒருவர் ஒரு பயிற்சிக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை பயிற்சியும், உபகரணங்களும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும்.
https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA என்ற இணையத்தில் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343 240500, 94422 47921, 90806 76557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow