மகளிர் சுய
உதவிக் குழு கடன்
தொகை அதிகரிப்பு
கூட்டுறவு
வங்கிகளில், மகளிர் சுய
உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை, 12 லட்சம்
ரூபாயில் இருந்து, 20 லட்சம்
ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாநில
தலைமை கூட்டுறவு வங்கி
மற்றும் மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கிகளில், நகரும்
கூட்டுறவு வங்கி சேவை
துவக்குவதற்காக, 34 வாகனங்கள்
வழங்கப்படும்
சென்னை
அண்ணாநகர், பூங்காநகர் கூட்டுறவு
மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் 4.50 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் சுயசேவைப்
பிரிவு மற்றும் பசுமை
நுகர்வோர் கடை கட்டப்படும்
கூட்டுறவு
மற்றும் கூட்டுறவு சங்க
அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும்
நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு சிறந்த பயிற்சி
அளிப்பதற்காக, ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை உருவாக்கப்படும்
கூட்டுறவு
வங்கிகளில் சுய உதவிக்
குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை, 12 லட்சம்
ரூபாயில் இருந்து, 20 லட்சம்
ரூபாயாக அதிகரிக்கப்படும்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடில், 1.25 கோடி
ரூபாய் மதிப்பீட்டில், உயிரி
உரம் மற்றும் உயிரி
பூச்சிக்கொல்லி உற்பத்தி
பிரிவு அமைக்கப்படும்
கூட்டுறவு
சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு, ‘மொபைல் போன் ஆப்‘
உருவாக்கப்படும். மதுரை,
வேலுார், துாத்துக்குடி, கடலுார்
மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கிகளின் தலைமை அலுவலகங்கள், 2 கோடி ரூபாய் செலவில்
நவீனமயமாக்கப்படும்
திருப்பூர், திருவள்ளூர், சேலம், செங்கல்பட்டு, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, 22 தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டப்படும்
துாத்துக்குடி மற்றும் கடலுார் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, 1.35 கோடி ரூபாய்
செலவில் நான்கு புதிய
கிளைகள் துவங்கப்படும்.