அரசு பணி
நியமனத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு: அரசு
தேர்வுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு
சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக
அரசு துறைகளில் உள்ள
பணியிடங்கள் மற்றும் மாநில
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள
பணியிடங்கள் அனைத்திலும், தமிழக
இளைஞர்களை 100% நியமனம் செய்யும்
பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து
போட்டி தேர்வுகளிலும் தமிழ்
மொழி பாடத்தாள் தகுதி
தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
வேலை
வாய்ப்பகங்கள் வழியாக
நிரப்பப்படுகின்ற அரசு
பணியிடங்களில் கொரோனா
தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல்
தலைமுறை பட்டதாரிகள், தமிழக
அரசு பள்ளிகளில் தமிழ்
மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரூ.1.10
கோடி செலவில், ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் புலனாய்வுகளை கூர்மைப்படுத்திட மென்பொருள் மற்றும் வல்லுநர்களின் சேவைகள்
பயன்படுத்தப்படும்.
புதிதாக
தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்ைட, தென்காசி,
திருப்பத்தூர் ஆகிய
வருவாய் மாவட்டங்களில் ரூ.2.93
கோடி செலவில் ஆறு
ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்பு பிரிவு அலுவலகம்
ஏற்படுத்தப்படும்.
கொரோனா
தொற்று காரணமாக பணியாளர்
தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி
தேர்வுகள் தாமதமானதால், நேரடி
நியமன வயது உச்ச
வரம்பு இரண்டு ஆண்டுகளாக
உயர்த்தப்படும்.
அரசு
நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்
ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து
40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்குரிய
சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும்.
அண்ணா
மேலாண்மை நிலைய பணியாளர்களுக்கு வளாகத்திலேயே ரூ.3.50
கோடி மதிப்பீட்டில் வாடகை
குடியிருப்புகள் அமைக்கப்படும்.
53 வயதை
கடந்த தொகுதி ‘அ’
மற்றும் ‘ஆ’ அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சிக்கு கூடுதலாக
ரூ.2 கோடி அண்ணா
மேலாண்மை நிலையத்திற்கு ஒதுக்கீடு
செய்யப்படும்.
மாநில
அரசு பணியில் உள்ள
இடைநிலை ஆசிரியர்கள் முதல்
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அங்கன்வாடி ஊழியர்கள்,
சத்துணவு பணியாளர்கள், அரசு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை,
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் அரசு
விடுதி காப்பாளர்கள் மற்றும்
முறையான பயிற்சி பெறாத
அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை
நிலையத்தில் சிறப்பு பயிற்சி
அளிக்கப்படும்.
அண்ணா
மேலாண்மை நிலையத்தில் ரூ.50
லட்சம் செலவில் காட்சி
ஊடகப்பாதை, படப்பிடிப்பு தளம்
அமைக்கப்படும்.
அகில
இந்திய குடிமைப்பணி தேர்வு
பயிற்சி மையம் மற்றும்
‘அ’ ,‘ஆ’ பிரிவு
அடிப்படை பயிற்சி நிலையத்தில் கணினி ஆய்வகத்தினை புதுப்பிக்கும் பொருட்டு ரூ.81 லட்சம்
செலவில் கணினிகள், அச்சுப்பொறி மற்றும் உபகரணங்கள் வாங்கப்படும்.