HomeBlogமின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
- Advertisment -

மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Increase in Concession for Electricity Board Employees

TAMIL MIXER EDUCATION.ன்
மின்வாரிய
செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு
அகவிலைப்படி
உயர்வு

மின்வாரிய தொழிலாளர்கள்
மற்றும்
அலுவலர்களுக்கு
வழங்கப்படும்
அகவிலைப்படி
3
சதவிகிதம்
உயர்த்தியுள்ளதாக
மின்வாரியம்
அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு
வழங்கப்படும்
அகவிலைப்படி
உயர்த்தப்பட்டு
வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு
வந்த
அகவிலைப்படி
31
சதவிகிதமாக
இருந்த
நிலையில்,
தற்போது,
மின்வாரிய
தொழிலாளர்கள்
மற்றும்
அலுவலர்களுக்கு
வழங்கப்படும்
அகவிலைப்படி
3
சதவிகிதமாக
உயர்ந்து
34
சதவிகிதமாக
அதிகரித்துள்ளதாக
மின்வாரியம்
அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

ஜூலை 1ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி அமல்படுத்தப்படும்
என்றும்,
செப்டம்பர்
2022
மாதத்திற்கான
உயர்த்தப்பட்ட
அகவிலைப்படி
இம்மாதத்தின்
ஊதியத்துடன்
இணைத்து
அக்டோபர்
மாதம்
பணமில்லா
பரிவர்த்தனை
முறையான
தீர்வு
சேவை
மூலம்
வழங்கப்படும்
என்றும்
தெரிவித்துள்ளது.

மேலும், அனுமதிக்கத்தக்க
உயர்த்தப்பட்ட
அகவிலைப்படியினைக்
கணக்கிட
அடிப்படை
ஊதியத்துடன்
தனிப்பட்ட
ஊதியத்தையும்
சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
திருத்தப்பட்ட
அகவிலைப்படியைக்
கணக்கிடுகையில்
ஒரு
ரூபாய்க்கும்
குறைவாக
வரக்கூடிய
தொகை,
அதாவது
50
காசும்
அதற்கு
மேல்
இருக்குமாயின்
அதனை
அடுத்த
ஒரு
ரூபாயாக
கனக்கில்
எடுத்துக்கொள்ள
வேண்டும்.

அதுவே 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டியதில்லை.
அறிவிக்கப்பட்டுள்ள
அனுமதிக்கப்பட்ட
திருத்தப்பட்ட
அகவிலைப்படி
தற்போது
அகவிலைப்படி
பெறும்
முழுநேர
பணியாளர்களுக்கும்,
அலுவலர்களுக்கும்
மற்றும்
திருத்தப்பட்ட
ஊதிய
விகிதம்
ரூ.4,100
– 12,500
பெறும்
பணியாளர்களுக்கும்
அனுமதிக்கத்தக்கது
என்று
அந்த
அறிக்கையில்
தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -