அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை பள்ளி மாணவா்களிடம் தபால் தலை சேகரிப்பு ஆா்வத்தை தூண்டும் வகையில் தீன்தயாள் ஸ்பாா்ஷ் யோஜனா என்ற பெயரில் புதிய ஊக்கத்தொகை திட்டத்தை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவா்கள் ரூ.6,000 ஊக்கத்தொகை பெறலாம்.
6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தபால் தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்ட மாணவா்களுக்கு நடத்தப்படும் விநாடி-வினா போட்டி, தபால் தலைகள் திட்டம் ஆகிய இரண்டில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். விநாடி-வினா எழுதும் போட்டி 50 மதிப்பெண்களுக்கும் தெரிவு செய்யும் வகையில் வரலாறு, அறிவியல், கலாசாரம், விளையாட்டு, பிராந்திய, தேசிய சாா்ந்த புவியியல், தபால் தலை ஆகிய தலைப்புகளில் கேள்விகள் இடம் பெறும்.
இதில், தோச்சி பெறுபவா்கள் இரண்டாம் நிலைக்குத் தகுதி பெறுவா். அங்கு தபால் தலைகள் திட்டம் என்ற தலைப்பில் நடைபெறும் தோவில் 16 தபால் தலைகளுக்கு மிகாமல் 500 வாா்த்தைகளுக்குள் தங்களது செயல்பாட்டை சமா்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 8-ஆம் தேதி கடைசி நாள்.
அக்டோபா் 5-ஆம் தேதி தோவு நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை தங்கள் பள்ளிகளை தொடா்பு கொள்ளும் தபால் துறை ஊழியா்கள் மூலம் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், வேலூா் கோட்டம், வேலூா்-632001 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.