TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
இரண்டாம் ஆண்டு
B.Ed., மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று
பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி
மற்றும் முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed., படிப்பு
தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் தமிழகத்தில் 750 க்கும் மேற்பட்ட
அரசு மற்றும் அரசு
உதவி பெறும் தனியார்
கல்வியில் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் நடப்பு
கல்வியாண்டில் 8000 திற்கும்
அதிகமான மாணவ மாணவிகள்
பயின்று வருகிறார்கள்.
B.Ed., மாணவர்களுக்கு பொதுவாக மூன்றாம் பருவத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு
மாணவ மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்று கற்றல் மற்றும்
கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
அதில்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தது
போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சிஇஓ அலுவலகங்களில் அனுமதி
பெற வேண்டும். இந்நிலையில் இந்த நடைமுறையில் காலதாமதம்
ஏற்படுவதால் இதனை ரத்து
செய்வதற்கு ஆசிரியர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது
தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு
பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில்
பயிலும் இரண்டாம் ஆண்டு
மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று
கற்பித்தல் மற்றும் கற்றல்
பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்த
பயிற்சிகளை வருகின்ற ஆகஸ்ட்
1ம் தேதி முதல்
நடைமுறைப்படுத்த வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டில்
மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து
பள்ளிகளின் பட்டியலை பள்ளி
கல்வித்துறை ஒதுக்கீடு செய்ய
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகம் அல்லது பள்ளிகளை
அணுக வேண்டிய அவசியம்
இல்லை.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here