தமிழக அரசானது வரும் ஜூன் மாதம் வறுமை ஒழிக்கும் நோக்கத்தில் புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பத்தை மேம்படுத்தும் “தாயுமானவர்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியவர்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், பயன்பெறுவார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏழை குடும்பங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow