தமிழக அரசு
ஊழியர்கள், காவல்துறையினருக்கு முக்கிய
அறிவிப்பு – தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம்
6ம் தேதி அதாவது
செவ்வாய்கிழமை சட்டமன்ற
தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக
அனைத்து தேர்தல் கட்சிகளும் மிக தீவிரமாக தங்களது
பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். தேர்தல் நேரத்தில்
கொரோனா பரவுவதால் தேர்தலை
மிக பாதுகாப்பாக நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக
முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும்
இந்த தேர்தலில் 80 வயதிற்கு
மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், காவல்துறையினர் மற்றும்
அரசு ஊழியர்கள் போன்றவர்கள் தபால் வாக்குகள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை
தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தபால் வாக்கு அளிக்கும்
பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 4.66 லட்ச பேர்
தபால் வாக்குகளை அளிக்கவுள்ளனர். அதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 12,40,309 பேர் ஆவர்.
அதேபோல் தபால் வாக்குகளை
அளிப்பதற்கு 4,35,300 மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதில்
தற்போது வரை 1.31 லட்ச
தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வருகிற
ஏப்ரல் மாதம் 5ம்
தேதி வரை தபால்
வாக்குகள் பெறப்படும் என்று
தெரிவிக்கப்பட்டது. தற்போது
வரை 92,559 நபர்களிடம் (80 வயதிற்கு
மேற்பட்டவர்கள்) 30,864 மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு
விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகளில்
ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வருகிற மே மாதம்
2ம் தேதி காலை
8 மணி வரை தபால்
வாக்குகள் பெறப்படும் என்று
தேர்தல் அதிகாரி சத்யபிரதா
சாகு கூறியுள்ளார்.