
10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பு 2023-2024ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடக்கிறது.
பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கு, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் பெறப்பட்டு வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதேபோல், தனித்தேர்வர்களாக தேர்வெழுதுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
நடப்பாண்டு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் 27-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
அதேசமயம், இந்த காலகட்டத்திற்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள், தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரூ. 1,000 மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ரூ. 500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow


