பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் கேன்சரை
தடுக்க
அவசியமான தடுப்பூசி
பெண்களை
அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் கேன்சரை தடுக்க,
சுய சுகாதாரம், தடுப்பூசி
இரண்டும் மிக அவசியம்.
ஏற்கனவே
இந்த வகை கேன்சரால்
பாதிப்பு இருப்பவர்களுக்கு, நோயின்
தாக்கத்திற்கு ஏற்ப
சிகிச்சை தர முடியும்.
இதைத் தடுக்க இரண்டு
வழிகள் உள்ளன; ஒன்று
தடுப்பூசி, அடுத்தது சுய
சுகாதாரம்.
குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி 9 வயதில்
போட்டால், கர்ப்பப்பை வாய்
கேன்சர் பாதிப்பை தடுக்கும்.
அடுத்த 20 ஆண்டுகளில், கணிசமான
அளவு கேன்சர் பாதிப்பை
குறைத்து விடலாம். கொழுப்பு,
கார்போ ஹைட்ரேட், உப்பு,
சர்க்கரை நிறைந்த பதப்படுத்திய துரித உணவுகள் அதிகம்
சாப்பிடுவது போன்றவற்றால் பெண்
குழந்தைகள், 10 வயதிற்கு முன்,
வயதிற்கு வந்து விடுகின்றனர் ஒன்பது 11 வயதில் தடுப்பூசி
போட்டு விட வேண்டும்.
இதனால்,
‘ஹெச்பி வி – ஹியூமன்
பேப்பிலோனா‘ வைரசால் ஏற்படும்
பல நோய்களை தடுக்கலாம்.
கர்ப்பப்பை வாய் கேன்சர் உருவாகவும் இந்த வைரஸ் தான்
காரணம். வைரஸ் தொற்று
ஏற்பட்டதும் கேன்சர் வந்து
விடாது. அது உடம்பினுள் தங்கி, மரபணு மாற்றம்
ஏற்பட்டு, நோய் எதிர்ப்பு
அணுக்கள் அழிக்க முடியாத
பட்சத்தில், கேன்சராக மாறும்;
இதற்கு, 20 ஆண்டுகள் கூட
ஆகலாம்.
நோய்
எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் குழந்தைகளுக்கு குறைவாகவே
இருக்கும். நாங்கள், 11 வயதில்
இருந்து தடுப்பூசி போடுகிறோம்.
முதல்
‘டோஸ்‘ போட்ட ஒரு
மாதம் கழித்து இரண்டாவது
டோஸ், அடுத்த ஆறு
மாதத்தில் மூன்றாவது டோஸ்
என்று மூன்று டோஸ்
தடுப்பூசி போட வேண்டும்.மேலும்
26 வயது வரை இந்த
தடுப்பூசி போடலாம் என்றாலும்,
தாம்பத்திய உறவு ஏற்படும்
முன் போடுவதே பாதுகாப்பு; பாதுகாப்பற்ற உறவின்
மூலமே இது பரவும்.
கொரோனா
பாதித்த பின், கை
கழுவுவது, பழக்க தோஷத்தில்
மறதியாக கை குலுக்கினால், உடனே சானிடைசர் பயன்படுத்துவது என்று கவனமாக இருக்கிறோம். அதே போன்று சுய
சுகாதாரத்தை சடங்காக நினைத்து
பின்பற்ற வேண்டும்.பாலியல்
உறவு குறித்து மகளிடம்
பேசும் அளவுக்கு இன்னும்
நாம் இயல்பான மனநிலையில் இல்லை.
இருந்தும்,
குழந்தைகளிடம் பாதுகாப்பான தாம்பத்திய உறவு பற்றி
விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டியது அவசியம்.முதல்
குழந்தை பெற்ற பின்,
கர்ப்பப்பை வாய் கேன்சருக்கு பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.