HomeBlogஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

IIT, IIM, IIIT, NIT students can apply for the scholarship

ஐஐடி, ஐஐஎம்,
ஐஐஐடி, என்ஐடி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய
அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி,
என்ஐடி மற்றும் மத்திய
பல்கலைக்கழகங்களில் பயிலும்
தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்
வகுப்பை சேர்ந்த மாணவர்கள்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு
மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு
கல்வி நிறுவனங்களான ஐஐடி,
ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி
மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும்
பட்ட மேற்படிப்பு பயிலும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப
ஆண்டு வருமானம் (2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக
மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு
அதிகபட்சம் 12 லட்சம் வரை
வழங்குவதற்கு தமிழக
அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த
கல்வி உதவித் தொகைக்கு
2021-2022
ம் கல்வியாண்டில் புதியது
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் இயக்குநர்,
பிற்படுத்தப்பட்டோர் நல
இயக்ககம், எழிலகம், இணைப்பு
கட்டடம் , 2வது தளம்,
சேப்பாக்கம், சென்னை – 05 அல்லது
சென்னை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சென்னை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறு பான்மையினர் நல
அலுவலகத்தை அணுகியோ அல்லது
மின்னஞ்சல் முகவரி tngovtiistscholarship@gmail.com,
www.dbcchn@nic.in  
முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பப்கோரி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்விண்ணப்பங்களை www.chennai.nic.in என்ற
இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும்,
மேற்படி 2021-2022ம்
நிதியாண்டிற்கான கல்வி
உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள்
பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான
விண்ணப்பத்தினை பரிந்துரை
செய்து நவம்பர் 30ம்
தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -