புதுச்சேரி மாணவர்களுக்கு IAS பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, மாணவர்களுக்கு இந்திய அளவிலான குடிமைப்பணி போட்டிகளில் கலந்து கொள்ள
அரசு சார்பில் மையங்கள்
அமைக்கப்பட்டு பயிற்சி
வழங்கப்படும் என
தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின
விழாவில் கலந்து கொண்ட
கவர்னர் கிரண்பேடி பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை வளரச்செய்தல் என்ற தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் காணொளிக்காட்சி மூலம்
உரையாற்றினார்.
அதில்
புதுச்சேரி, காரைக்கால், மாகி,
ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 2500 மாணவர்கள் கலந்து
கொண்டனர். இதில் மாணவர்கள்
கவர்னரிடம் சுயசார்பு, திறன்மேம்பாடு, குடிமை பணி, இந்திய
நாட்டின் முன் உள்ள
மிகப்பெரிய சவால்கள், விவசாயம்,
நீர் பாதுகாப்பு, மேலாண்மை,
ஊழலற்ற இந்தியா, தொழில்முனைவோர் தொடர்புடைய 20 கேள்விகளுக்கு பதில்
அளித்தார். பின்னர் மாணவர்கள்
எவ்வாறு பொறுப்புள்ள குடிமகனாக
உருவாக்க முடியும் என
விளக்கினார்.
மேலும்
புதுச்சேரி மாணவர்கள் இந்திய
அளவிலான குடிமைப்பணி தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற
வேண்டும். அதற்காக புதுச்சேரி அரசு சார்பில் இந்திய
ஆட்சி பணி (ஐ.ஏ.எஸ்.),
இந்திய காவல் பணி
(ஐ.பி.எஸ்.)
மற்றும் புதுச்சேரி குடிமை
முறை பணி ஆகிய
பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.