ஐ.ஏ.எஸ்.,
பயிற்சிக்கு ஊக்கம்
ஐ.ஏ.எஸ்.,
எனப்படும், இந்திய குடிமைப்
பணி கள் அதிகாரிகளின் பணித் திறனை ஊக்குவிக்கும் வகையில், மிஷன் கர்மச்சாரி என்ற திட்டத்தை மத்திய
அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த
திட்டத்தை செயல்படுத்துவதுடன், ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் பயிற்சி அளிக்கும்
மையங் களை மேம்படுத்தவும், மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு
உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் முசோரியில் உள்ள
லால் பகதூர் சாஸ்திரி
தேசிய நிர்வாக அகாடமியை,
உயர்திறன் பயிற்சி மையமாக
உயர்த்துவது உள் ளிட்ட
பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதைத்
தவிர, ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகளுக்கு உள்
நாட்டிலும், வெளிநாட்டிலும், பயிற்சி
அளிக்கப் பட உள்ளது.
இதற்காக,
மத்திய பணியாளர் மற்
றும் பயிற்சி துறைக்கு,
இந்த பட்ஜெட்டில், 257 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.