தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.
மேலும் இது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த முகமானது மகளிர் திட்ட அலுவலகம், 3-வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் – 607001 என்ற முகவரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற இருக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 -ம் வகுப்பு, 12 -ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.