நிலையான நிரந்தர, அதிக வருமானம் தரும் தொழில்களில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலும் ஒன்று. அயல்நாட்டில் என்ன தேவை இருக்கிறதோ அது சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்தும் மற்றும் உள் நாட்டில் பற்றாக்குறை உள்ள பொருட்களை இறக்குமதி செய்தும் நல்ல லாபம் ஈட்டலாம்.
ஆனால் இதற்காக சில விதிகள் உள்ளன. மேலும் முறையான பயிற்சியை எடுத்துக் கொண்டால் இத்தொழிலில் சிறப்பாக ஜொலிக்கலாம். இதற்காகவே தமிழக அரசு ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பயிற்சி முகாமினை நடத்த உள்ளது. இதுகுறிது அரசு வெளியிட்டு செய்திக்குறிப்பு :
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 26.12.2024 முதல் 28.12.2024 தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: மாவட்டத் தொழில் மையம், கரூர்
மாவட்டம்.
இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 99943 22859 / 90806 09808
- அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
- முன்பதிவு அவசியம்: www.editn.in