TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)
குறுகிய காலத்தில்
முலாம்பழம் சாகுபடி செய்து லாபம் பார்ப்பது
எப்படி?
முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல
வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது.
இத்தகைய
லாபம் கொடுக்கும் பயிரான
முலாம்பழம் சாகுபடி பற்றி
பார்ப்போம்.
முலாம்பழம் சாகுபடிக்கு ஏற்ற மாதம்:
முலாம்பழச் சாகுபடிக்கு செடி பருவத்தில் பனி தேவை. விளையும்
போது பனி இருக்கக்
கூடாது. அதனால், இதற்கு
மாசி மாதம் ஏற்றது.
முலாம்பழம் சாகுபடிக்கு ஏற்ற மண்:
முலாம்பழத்திற்கு செம்மண், மணல்
கலந்த செம்மண், மணல்
சரியான மண் வகைகள்
சிறந்தவை ஆகும்.
நிலத்தை தயார் செய்யும் முறை:
சாகுபடி
நிலத்தை மூன்று முதல்
நான்கு முறை உழவு
செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும்.
பிறகு,
ஒரு ஏக்கருக்கு 6 டன்
தொழு உரம் அல்லது
மாட்டு எருவை கொட்டி
கலைத்து விட வேண்டும்.
கடைசியாக,
ரோட்டோவேட்டர் மூலம்
உழுது நிலத்தை சமப்படுத்தி கொண்டு வசதிக்கேற்ப பாசன
வசதிகளை செய்து கொள்ள
வேண்டும்.
விதை அளவு மற்றும் நடவு செய்யும் முறை:
ஒரு
ஏக்கருக்கு 200 கிராம் முதல்
250 கிராம் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இரண்டு
அடி, செடிக்கு செடி
அரை அடி இடைவேளையில் கைகளால் குளிர் தோண்டி
நீர் பாய்ந்து மாலை
நேரத்தில் நடவு செய்ய
வேண்டும் பிறகு ஈரப்பதத்தை பொறுத்து பாசனம் செய்ய
வேண்டும்.
உரமிடுதல்:
விதைத்த
10ம் நாள் முதல்
வாரம் ஒரு முறை
ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர்
ஜீவாமிர்தக் கரைசலை பாசன
நீரில் கலந்து விட
வேண்டும்.
பிறகு
25ம் நாளில் கொடி
படர ஆரம்பித்து, 30ம்
நாளில் பூ எடுக்க
ஆரம்பிக்கும். அந்த
சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அரப்பு
மோர் கரைசல் கலந்து
தெளிப்பான் மூலம் தெளிக்க
வேண்டும். ஏக்கருக்கு 7 டேங்குகள்
தேவைப்படும்.
தலா
ஒரு கிலோ வீதம்
இஞ்சி, பூண்டு, பச்சை
மிளகாய் உடன், 100 கிராம்
லவங்கம் பட்டையை அரைத்து
கலந்து நான்கு லிட்டர்
தண்ணீரில் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
அரை
கிலோ புகையிலை 2 லிட்டர்
தண்ணீரில் ஒரு நாள்
முழுவதும் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும். இந்த
இரண்டு கரசல்களையும் ஒன்றாக
கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம்
40ம் நாளில் தெளிக்க
வேண்டும். ஏக்கருக்கு ஆறு
டேங்குகள் தேவைப்படும்.
பூச்சி தாக்குதல் விரட்ட:
நடவு
செய்த 6ம் நாளில்
விதைகள் முளைத்து, இரண்டு
இலைகள் வெளியில் தெரிய
ஆரம்பிக்கும். பூச்சி
தாக்குதல் 8 ம் நாளிலிருந்து தென்பட ஆரம்பிக்கும்.
இந்த
சமயத்தில், ஒரு டேங்க்
தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி
மீன் அமிலம், 100 மில்லி
மூலிகை பூச்சி விரட்டி
ஆகியவற்றை கலந்து ஒரு
ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம்
தெளிக்க வேண்டும்.
15 முதல்
20 ம் நாளுக்குள் தலா
ஒரு கிலோ விதம்
இஞ்சி, பூண்டு, பச்சை
மிளகாய் எடுத்து இடித்து,
10 லிட்டர் தண்ணீரில் 12 மணி
நேரம் ஊறவைத்து, 10 லிட்டர்
தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல்
கலந்து தெளிப்பான் மூலம்
தெளிக்க வேண்டும். இதே
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும், ஏக்கருக்கு பத்து
டேங்குகள் தேவைப்படும்.
அறுவடை:
முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள்.
45 முதல் 55 நாட்களில் காய்கள்
ஒரு கிலோ முதல்
இரண்டு கிலோ அளவுக்கு
வந்து விடும்.
60ம்
நாள் முதல் அறுவடை
செய்யலாம். அடுத்து ஒரு
வார இடைவெளியில் இரண்டு
அறுவடைகள் செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக 9 டன் அளவுக்கு
மகசூல் கிடைக்கும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here