இலவச தையல் இயந்திரம் பெறுவது எப்படி?
தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் தையல் இயந்திரத்தை எப்படி பெறுவது?
தமிழகத்தில் சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.
ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- வயதுச் சான்றிதழ்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- வருமானச் சான்றிதழ்
- ஆதார் அட்டை
- சாதி சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- தையல் பயிற்சி சான்றிதழ்
உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்
இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் மாவட்டத்தில் உள்ள சமுகநலத்துறைக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
விண்ணப்பப்படிவம்: Click Here