ஆன்லைன் மூலமாக
டிரைவிங் லைசன்ஸ்
எப்படி
பெறுவது?
இருசக்கர
வாகனம், கார் ஓட்டும்
அனைவருக்கும் ஓட்டுநர்
உரிமம் கட்டாயமான ஒன்றாகும்.
உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ்
ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது
திருடப்பட்டுவிட்டாலோ என்ன
புதிய லைசன்ஸ் வாங்குவதற்கு RTO அலுவலகத்துக்கு அலையத்
தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே புதிய லைசன்ஸ் வாங்கிவிடலாம்.
மாநில
அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலேயே சென்று டூப்ளிகேட் லைசன்ஸுக்கு விண்ணப்பித்து வாங்கலாம்.
https://parivahan.gov.in/parivahan/ என்ற
வெப்சைட்டில் சென்று
online services என்ற பிரிவின் கீழ்
driving license related services என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு
எந்த மாநிலம் என்பதைப்
பதிவிட வேண்டும். தமிழகம்
என்றால் அதை தேர்வுசெய்து உள்நுழையவும்.
அதில்
ஓட்டுநர் உரிமம் தொடர்பான
அனைத்து வசதிகளும் இருக்கும்.
அதில் சென்று டூப்ளிகேட் லைன்சன்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த ஒரு
மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் கிடைத்துவிடும்.