ஆதார் கார்டு
தொலைந்து விட்டால் ஆன்லைனில்
டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் தேவை:
- ஆதார் எண்
அல்லது Enrolment ID அல்லது
Virtual ID - ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது
Email ID - பின்னர் ஆதார்
ஆணையத்தின் இணையதளத்தில் https://uidai.gov.in/ ஆதார்
மீட்பு கோரிக்கையை முன்வைக்க
வேண்டும். 1947 என்ற உதவி
எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் உங்களது ஆதார் Enrolment IDஐ
தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம்
ஆதாரம் டிஜிட்டல் நகலையும்
ஈசியாக பெற்றுக்கொள்ளலாம். - முதலில் நீங்கள்ஆதார் இணையதளத்துக்கு செல்ல
வேண்டும். அதில் உள்ள
‘My Aadhaar’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். - அதில் Retrieve Lost or
Forgotten EID/UID Number ஆப்ஷனை கிளிக் செய்ய
வேண்டும். புதிதாக திறக்கும்
பக்கத்தில் ஏதேனும் ஒன்றை
தேர்வு செய்யவும். - பெயர், மொபைல்
எண், இமெயில் ஐடி
உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி
செய்யவும், உங்கள் மொபைலுக்கு வரும் OTP பாஸ்வோர்டை பதிவிட்டு
Login செய்யவும். இதன் பிறகு
ஒடிபியை பதிவு செய்து
கிளிக் செய்யவும். இதன்
பிறகு Validate & document என்பதை
Click செய்யவும். இதன்
பிறகு உங்களது ஆதாரின்
நகலை பெற்றுக் கொள்ளலாம்.