இணைய வழி நீதிமன்ற சேவைகளின் வலைவாசல்:
ஒரு மையப்படுத்தப்பட்ட நுழைவுவாயிலானது இணைய வழி நீதிமன்ற திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்புகளை வழங்குகிறது. குடிமக்கள், வழக்காடிகள், வழக்கறிஞர்கள், அரசு மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் முதலிய பொறுப்பாளர்கள் நாட்டின் நீதித்துறை அமைப்பு தொடர்பான தரவு மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள வகை செய்கிறது.
இணைய வழி தேசிய நீதிமன்றங்களின் வலைவாசல் , இணைய வழிக் களஞ்சியமாகச் செயல்படுகிறது. இது பல்வேறு சேவைகளையும் வெவ்வேறு வகையான தரவுகளையும் வழங்குகிறது, அதாவது :
1.வழக்குப் பட்டியல்
2. வழக்கின் நிலை: வழக்கு எண், முதல் தகவல் அறிக்கை எண், தரப்பினர் பெயர், வழக்குரைஞர் பெயர், பதிவு செய்த எண், சட்டம் அல்லது வழக்கு வகை போன்ற பல்வேறு தேடல் அளவு கோல்களால் வழக்கின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
3. அன்றாட உத்தரவுகள் மற்றும் இறுதி தீர்ப்புள்: CNR எண், வழக்கு எண், நீதிமன்ற எண், தரப்பினர் பெயர் மற்றும் உத்தரவு எண் போன்றவற்றின் வாயிலாக உத்தரவுகள் மற்றும் இறுதித் தீர்ப்புகளை அறிந்து கொள்ள இயலும்.
Website: http://services.ecourts.gov.in
Video Details