யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி? நாளை முதல் பயிற்சி – தமிழக அரசு
சென்னை ஈக்காட்டுதாங்கலில் இயங்கி வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி என்பது குறித்த பயிற்சி, நாளை (ஜனவரி 9-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் இணையதள சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும்.
யூடியூப் சேனல் உருவாக்கம், வீடியோ மற்றும் ஸ்லைடுஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடக ஒருங்கிணைப்பு, ஆன்லைன் மார்க்கெட்டிங், ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகளை விரிவாக இந்த பாடநெறி உள்ளடக்கியது.
மேலும் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.முன்பதிவு செய்ய 86681 02600 மற்றும் 86681 00181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow