ஆன்லைனில் ஆதார்
மற்றும் பான் (PAN)
இணைப்பது எப்படி?
ஆதார்
மற்றும் பான் (PAN)
இணைப்பதற்கான கடைசி
தேதி மார்ச் 31 ஆகும்.
அதைச் செய்யாவிட்டால், பான்
கார்டு செல்லாது. மேலும்
ரூ.10 ஆயிரம் வரை
அபராதம் விதிக்கப்படும் எனவும்
கூறப்பட்டுள்ளது.
நடப்பு
ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவில், ஒரு
திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது அதன்படி
ஒரு நபர் பான்
உடன் ஆதார் எண்ணை
இணைக்காவிட்டால் ரூ.1,000
வரை தாமத கட்டணம்
செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே
மார்ச் 31ம் தேதிக்குள் ஒரு நபர் பான்
மற்றும் ஆதார் எண்ணை
இணைக்கத் தவறினால், அவர்
1,000 கட்டணம் செலுத்த வேண்டி
இருக்கும். இந்த கட்டணம்
ஆதார் இணைக்கப்படாத காரணத்தால் பான் கார்டு செயல்படாமல் போனால் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் ஆதார்
மற்றும் பான் (PAN)
இணைப்பது எப்படி?
வருமான வரி
அதிகாரபூர்வ இணையதள பக்கமான
https://www.incometaxindiaefiling.gov.in/home
க்கு
சென்று, Link Aadhaar என்ற
ஆப்ஷனை Click செய்க.
பான்
எண், ஆதார் அட்டை
வைத்திருப்பவரின் பெயர்
மற்றும் எண் போன்ற
தேவையான விவரங்களை உள்ளிடவும். விவரங்களைச் சரிபார்த்து Captcha குறியீட்டை உள்ளிடவும்.
அனைத்து
விபரங்களையும் உள்ளிட்ட
பின்னர் இணைப்பு ஆதார்
என்பதைக் Click செய்க.
அதன்
பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பின்னர்
உங்கள் ஆதார் உங்கள்
பான் உடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விடும்.