வெளிநாடுவாழ் இந்தியர்(NRI) ஒருவர் நம் நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனில், அவரிடம் பான்கார்டு இருக்க வேண்டும்.
அதன்படி, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவருக்கு இருப்பின், அவர் பான்கார்டு வைத்திருக்க வேண்டும். தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்கள் எவ்வாறு பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதனை தெரிந்துக்கொள்வோம்.
NRI பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துக்கொள்வோம்:
- வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய குடியுரிமை பெற்று இருந்தால் படிவம் 49Aஐ நிரப்பவும்.
- வேறு நாட்டின் குடி உரிமை கொண்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள், படிவம் 49AAஐ நிரப்பவும்.
- அதன்பின் UTIITSL மற்றும் NDSL இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் குறிப்பிட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும்.
- அவ்வாறு படிவத்தை சமர்ப்பித்த பின், உருவாக்கப்பட்ட 15 இலக்க எண்ணுடன் ஒப்புகை நகலையும் (Acknowledgment Copy) ஆவணங்கள் உடன் நியமிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்
- இந்தியாவுக்குள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வழங்கும் தகவல் தொடர்பு முகவரிக்கு ரூபாய். 107 கட்டணமாக வசூலிக்கப்படும். அதே நேரம் இந்தியாவிற்கு வெளியில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் அதனை அனுப்பும் கட்டணங்கள் உட்பட அனைத்தும் சேர்த்து ரூபாய்.989 வசூலிக்கப்படும்.
- ஆன்லைன் விண்ணப்பங்கள் டெபிட், கிரெடிட் கார்டு (அ) நெட் பேங்கிங் வாயிலாக கட்டணம் செலுத்தவும்.
தேவையான ஆவணங்கள்:
- ஒப்புகைப் படிவத்தில் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் கொடுக்கவும்.
- வசிக்கும் நாட்டிலுள்ள வங்கிக் கணக்கு ஸ்டேட்மண்ட் நகல்.
- NRE வங்கிக் கணக்கு அறிக்கை நகல் சமர்பிக்கவும். அதில் கடந்த 6 மாதங்களில் குறைந்தது 2 பரிவர்த்தனைகள் நடந்திருக்க வேண்டும்.